பிரபல பிரித்தானிய நடிகரின் மகனை மணம் முடித்த இலங்கை வம்சாவளிப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

905

நேத்ரா திலகுமார..

இன்று அவர் இருந்திருந்தால், இது நாங்கள் சந்தித்த இரண்டாவது ஆண்டின் நினைவுநாள் விழாவாக இருந்திருக்கும் என்கிறார் நேத்ரா திலகுமார (21).

இலங்கை வம்சாவளியினரான நேத்ரா, பிரபல பிரித்தானிய நடிகரான Nicholas Lyndhurstஇன் மகனான ஆர்ச்சியின் காதலி. நேத்ராவை சந்தித்து இரண்டு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில், அபூர்வ வகை இ.ர.த்.த.ப்.புற்றுநோய்க்கு ப.லி.யா.னா.ர் ஆர்ச்சி (19). மேலை நாடுகளில் காதலும் பிரிவும் சகஜம்.

பல ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தவர்களே பிரிந்து செல்லும் நிலையில், இலங்கை வம்சாவளியினரான நேத்ராவோ, இன்னமும் தன் காதலன் நினைவாகவே இருக்கிறார்.


தாங்கள் சந்தித்த ஏப்ரல் 12ஆம் திகதியை நினைவுகூரும் நேத்ரா, தங்கள் இரண்டாவது நினைவுநாளில் ஆர்ச்சிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், உன்னை நான் சந்தித்தபின் என் வாழ்வே மாறிப்போனது என்று கூறும் நேத்ரா, உன்னை சந்தித்த நாள் முதல் என்னை மகிழ்ச்சியாகவே வைத்துக்கொண்டதற்கு நன்றி, உன்னை மீண்டும் ஒரு நாள் சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.

அவர்தான் அப்படி என்றால், ஆர்ச்சியின் தாயான லூசியும், நேத்ராதான் என் மகனுடைய வாழ்வே என்கிறார். அப்படியானால், எப்படி காதலித்திருப்பார்கள் ஆர்ச்சியும் நேத்ராவும் என்று ஆச்சரியப்படத் தோன்றுகிறது.

வாழ்க்கை சில நேரங்களில் கொ.டூ.ரமாக இருக்கிறது என்று கூறும் லூசி, 800இல் ஒருவர்தான் இந்த அபூர்வ நோ.யா.ல் உ.யி.ரி.ழ.ப்பதாக தெரிவிக்கிறார்.

ஆர்ச்சி, So Awkward என்னும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து பிரபலமாகியிருந்தார். அதே தொடரில் நேத்ராவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.