பிரான்சில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை பொலிசார் தற்போது மீட்டுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் Ivry-sur-Seine நகரின் rue Jean-le-Galleu வீதியில் உள்ள வீடு ஒன்றில் நீண்ட நாட்களாகவே புறாக்கள் அங்கும், இங்கும் பறந்து திரிந்ததால், சந்தேகமடைந்த பக்கத்து வீட்டு நபர், இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், குறித்த வீட்டிற்கு உள்ளே செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அந்த வீட்டின் கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டே வீடு, பல ஆண்டுகளாகவே பூட்டப்பட்டு கிடப்பதை உறுதி செய்தனர்.
அதன் பின் வீட்டின் கதவை உடைத்து பொலிசார் உள்ளே சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது வீட்டின் படுக்கை அறை கட்டிலில் சுமார், 68 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதன் பின் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து வெளிவ்ந்த பிரேதபரிசோதனை அறிக்கையில், இவர் 2013-ஆம் ஆண்டு இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
சடலம் முற்றாக சிதைவடைந்து, புறாக்கள் தின்று கிட்டத்தட்ட எலும்புக்கூடுகள் மாத்திரமே இருந்துள்ளன. அவரின் இறப்பு மீதான சந்தேகங்களை உறுதி செய்ய Ivry-sur-Seine நகர காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.