பிரான்சில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா! கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேர் பலி மற்றும் பாதிப்பு தெரியுமா?

354

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரி எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் பிரான்சில் கடந்த சில தினங்களாகவே அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 7,017 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை 3,000 பேருக்கும், நேற்று செவ்வாய்க்கிழமை கிட்டத்தட்ட 5,000 பேருக்கும் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தின் பின்னர் ஒரே நாளில் அதிகபட்சமாக 7,017 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.


4,632 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 446 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிர சிகிச்சைப்பிரிவில் 57 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பிரான்சில் 30,686 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்களில் 25 பேர் கடந்த 24 மணிநேரத்தில் மரணமடைந்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.