பிரான்ஸ் நாட்டில் பழிக்குப்பழி தீர்ப்பதற்காக சுற்றித்திரியும் குழுவினர்… நகரமொன்றில் களமிறக்கப்பட்டது இராணுவம்!
பிரான்ஸ் நகரமொன்றில் போட்டி செச்சன்ய குழுக்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளதால் சூழ்நிலையை கட்டுப்படுத்த இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
செச்சன்ய குடியரசில் 1990களில் இரண்டு போர்கள் வெடித்தபோது அங்கிருந்து சுமார் 30,000 செச்சன்யர்கள் பிரான்சுக்கு புலம்பெயர்ந்தனர்.
தற்போது கேங்குகளாக பிரான்சின் Dijon நகரில் வலம் வருகிறார்கள் இந்த செச்சன்யர்கள்.
தற்போது ஒரு கேங்கைச் சேர்ந்த 16 வயது இளைஞன் ஒருவன் தாக்கப்பட்டநிலையில், அவனைத் தாக்கியது யார் என்று கண்டுபிடித்து பழிக்குப்பழி வாங்குவதற்காக மற்றொரு கேங் வீடு வீடாக சென்று முரட்டுத்தனமாக சோதனையிட, மோதல் உருவெடுத்துள்ளது.
துப்பாக்கிகள் உட்பட பல பயங்கர ஆயுதங்களுடன் முகமூடிகளையும் ஹெல்மட்களையும் அணிந்தவர்கள் சாலையில் வலம் வரும் வீடியோக்களைக் காணமுடிகிறது.
Dijon நகரில் அமைதியின்மை நிலவுவதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.