பிரித்தானியாவின் மிக மோசமான 5 கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகள் இவை தான்: வெளியான தகவல்!!

861

பிரித்தானியாவில் உள்ளூர் ஊரடங்கு நடவடிக்கைக்கு இடமளிக்கும் அபாயத்தில் உள்ள 10 பகுதிகளை பொது சுகாதார இங்கிலாந்து அறிவித்த நிலையில், ஐந்து புதிய கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்கள் இன்று இரவு வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் லெய்செஸ்டர் பகுதி இன்னமும் முதலிடத்தில் உள்ளது, ஆனால் பெண்டில், ஹியர்ஃபோர்ட்ஷைர், ஓபி மற்றும் விக்ஸ்டன், ஈஸ்ட் ஸ்டாஃபோர்ட்ஷையர் மற்றும் லூதன் ஆகிய பகுதிகள் இன்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

மேலே குறிப்பிட்ட பகுதிகளுடன் பிளாக்பர்ன் / டார்வன், பிராட்போர்டு, ரோச்ச்டேல், பீற்றர்பரோ ஆகிய பகுதிகளும் உள்ளூர் ஊரடங்கு அபாயத்தில் உள்ளன.

ஜூலை 13 வரையிலான வாரத்தில் 100,000 க்கு 99.7 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை வெளியான நிலையில், உள்ளூர் ஊரடங்கு அமுலுக்கு வந்த முதல் நகரம் லெய்செஸ்டர் ஆகும்.


லெய்செஸ்டரில் வரும் வாரங்களில் கடைகள் மற்றும் ஆரம்ப ஆண்டு கல்வி மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று சுகாதார செயலாளர் மேட் ஹான்காக் இன்று தெரிவித்தார்.

ஆனால் பாதிக்கப்பட்ட முக்கிய பகுதி அடையாளம் காணப்படுவதுடன், நாகரம் பகுதி ஊரடங்கில் இருக்கும் என்றார் அவர். லெய்செஸ்டர் நகரம் மட்டுமல்லாமல் Oadby மற்றும் விக்ஸ்டனின் புறநகர்ப் பகுதிகளும் இதில் அடங்கும்.

உள்ளூர் ஊரடங்கு நடவடிக்கைக்குள் நுழைய பெரும்பாலும் இங்கிலாந்து பெரு நகரங்கள் மற்றும் நகரங்களின் பட்டியலில் புறநகர்ப் பகுதிகள் ஆறாவது இடத்தில் உள்ளன. இன்று முன்னதாக நடைபெற்ற அவசர நிலை பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, புதிய தடுப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க பெண்டில் குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

வெளியான புதிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் லெய்செஸ்டருக்கு அடுத்து பெண்டில் பகுதி நாட்டில் இரண்டாவது மிக அதிகமான தொற்று வீதத்தைக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.