பிரித்தானியாவில் நடந்த பயங்கரம்! பலர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபரின் சிசிடிவி காட்சியை வெளியிட்ட பொலிசார்!!

418

பிரித்தானியாவின் பிர்மிங்காம் நகரில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் சந்தேக நபரின் சிசிடிவி காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் West Midlands மாகாணத்தின் Birmingham நகரின் இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு மிகவும் பிரபலமான இடமானConstitution Hillபகுதியில் நேற்று இரவு முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அப்போது இரவு உள்ளூர் நேரப்படி 12.30 மணியளவில் அப்பகுதிக்கு வந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு அங்கிருந்தவர்கள் மீது திடீரென்று தாக்குதல் நடத்தினார்.

அதன் பின், அங்கிருந்து தப்பிச்சென்ற அந்த மர்ம நபர் Livery தெரு, Irving தெரு, Hurst தெரு ஆகிய பகுதிகளுக்கு அடுத்தடுத்து சென்று அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் மீது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு தாக்குதல் நடத்தினார்.


இரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை அந்த மர்ம நபர் தெருக்களில் சுற்றித்திருந்து தன் கண்ணில் பட்டவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதல் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள், தாக்குதல் நடத்திய நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்டார்..

இதையடுத்து, கத்தி குத்து தாக்குதலில் படுகாயமடைந்த 8 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 8 பேரில் 1 நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

எஞ்சிய 7 பேருக்கும் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற மர்மநபரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் சிசிடிவி வீடியோ காட்சியை பொலிசார் வெளியிட்டு மக்களின் உதவியை நாடியுள்ளனர். சிசிடிவி காட்சியில் இருக்கும் நபர் ஒரு பேஸ்பால் தொப்பி அணிந்த இளைஞர் போன்று இருக்கிறார்.

சிசிடிவியில் உள்ள நபரை அடையாளம் காணும் எவரும் அவசரமாக பொலிசாரை தொடர்பு கொள்ளும் படி கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவையா? அல்லது கும்பல் தொடர்புடையவையா? என்பது தெரியவில்லை எனவும், தொடர் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.