பிரித்தானியாவில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த 27 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி! எச்சரிக்கை தகவல்!

942

பிரித்தானியாவில் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்த 27 வயது இளம் பெண் வெறும் வயிற்றில் மது குடித்ததால், பரிதாபாக உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவின் Brighton-ஐ சேர்ந்தவர் Alice Burton Bradford. 27 வயதான இவர் கடந்த மாதம் தன்னுடைய வீட்டின் தோட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.

இறப்பதற்கு முன் இவர் வெறும் வயிற்றில் மது அருந்தியுள்ளார். அதன் காரணமாக அவர் சிக்கலான ஆல்கஹால் கெட்டோஅசிடோசிஸால் அவதிப்பட்டுள்ளார்.

ஆனால், உயிரிழந்த Alice Burton Bradford ஒரு குடிகாரர் கிடையாது. நல்ல உடல் ஆரோக்கியமுடன் இருக்க கூடியவர், எப்போதும் சைக்கிள் ஓட்டுவது, நண்பர்களுடன் ஓடுவது என்று தான் இருப்பார்.


இது முற்றிலும் பயங்கரமான அதிர்ச்சி, யாருமே எதிர்பார்க்கவேயில்லை, இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு கூட, தூரத்தில் இருக்கும் ஹலேவிற்கு சைக்கிளில் சென்றிருந்தார்.

அவள் இறக்கும் வரை ஆல்கஹால் கெட்டோஅசிடோசிஸ் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. அந்த வார இறுதியில் அவள் எவ்வளவு குடித்துக்கொண்டிருந்தாள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் அவள் ஒரு குடிகாரர் அல்ல. அவள் போதுமான அளவு சாப்பிடவில்லை, அது அவள் வயிற்றில் ஒரு அமிலத்தைத் தூண்டியது. ஆனால் அவளுடைய தோட்டத்திற்கு வெளியே சென்று அங்கேயே காலமானாள்.

அவள் இவ்வளவு இளம் வயதில் உயிரிழந்தது மிகவும் சோகமானது என்று அவரின் எட்டு ஆண்டுகால நண்பர் Aaron Mulvay என்பவர் கூறியுள்ளார்.

இதனால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்று கண்ட நேரத்தில் மது அருந்துவது, ஆபத்தை ஏற்படுத்தும், இந்த சம்பவம் மது பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவலாகவே பார்க்கப்படுகிறது.