பிரித்தானியாவில் நள்ளிரவில் நடந்த கொலை வெறி தாக்குதல்! உயிரிழந்த இளைஞனின் புகைப்படம் மற்று தகவல் வெளியானது!!

354

பிரித்தானியாவின் பர்மிங்காமில் நள்ளிரவில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் பர்மிங்காமில் நேற்று நள்ளிரவு கத்தியுடன் வந்த இளைஞர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை தாக்கினான்.

அதன் பின், அங்கிருந்து தப்பிச்சென்ற அந்த மர்ம நபர் Livery தெரு, Irving தெரு, Hurst தெரு ஆகிய பகுதிகளுக்கு அடுத்தடுத்து சென்று அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் மீது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு தாக்குதல் நடத்தினான்.

சுமார் 90 நிமிட இந்த சம்பவத்தில் 7 பேர் காயமடைந்திருப்பதாகவும், 2 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக 27 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.


இந்நிலையில், சம்பவத்தில் Liverpool-ஐ சேர்ந்த Jacob Billington என்ற 23 வயது இளைஞன் உயிரிழந்துள்ளான். பள்ளி நண்பர்களில் ஒருவரை சந்திக்க வரும் போது இந்த சம்பவத்தின் காரணமாக அந்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த நண்பர்களில் ஒருவரான 23 வயது மதிக்கத்தக்க நபர் காயமடைந்து, மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

 

இது குறித்து அந்த இளைஞனின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜேக்கப் எங்கள் வாழ்க்கையின் வெளிச்சம், அவருடைய இழப்பால் நாங்கள் பேரழிவிற்கு ஆளானோம்.

அவர் ஒரு வேடிக்கையான, அக்கறையுள்ள மற்றும் அற்புதமான மனிதர், அவர் சந்தித்த ஒவ்வொரு நபராலும் நேசிக்கப்பட்டார்.

நகைச்சுவரை தன்மை கொண்ட, ஒரு சிறப்பு நபரின் இழப்பு அவரை பல ஆண்டுகளாக அறிந்த அனைவராலும் உணரப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.