பிரித்தானியாவில் பொலிஸ் கனவுடன் இருந்த 6 வயது சிறுவனுக்கு நடந்த துயரம்! நிலை குலைந்து நிற்கும் தாய்!!

370

பிரித்தானியாவில் கார் விபத்து ஒன்றில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அந்த சிறுவன் பொலிஸ் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதாக அஞ்சலி நிகழ்வின் போது குடும்பத்தினர் வேதனையுடன் கூறியுள்ளனர்.

பிரித்தானியாவின் மான்செஸ்டரின் Hulme-வில் இருக்கும் Wilmott வீதியில், ஞாயிற்றுக் கிழமை மாலை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் 6 வயது மதிக்கத்தக்க Kidus Wondwosen என்ற சிறுவன் கடந்த ஞாயிற்றுக் கிழமை சைக்கிள் ஒட்டி விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று கார் ஒன்று வந்து மோதியதில் ஏற்பட்ட விபத்தில் Kidus Wondwosen பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 32 வயதான ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு பின்னர் விடுவித்தனர்.

இதையடுத்து உயிரிழந்த சிறுவனுக்கு மான்செஸ்டர் பொலிசார் நடத்திய அஞ்சலியில் கலந்து கொண்ட குடும்பத்தினர், ஒரு மகிழ்ச்சியான, எப்போது சிரித்து கொண்டிருக்கும் அழகான சிறுவன் என்று கூறியுள்ளனர்.


அவர் மிகவும் புத்திசாலி, பள்ளியில் தனது வகுப்பில் புத்திசாலி பையன். குறித்த சிறுவனுக்கு அவருடைய அம்மா, அத்தை மற்றும் சகோதரரை மிகவும் பிடிக்கும்.

நிறைய நண்பர்களை கொண்டிருந்தார். அவர்களுடன் விளையாடுவதை விரும்புவான். கால்பந்து அவனுக்கு மிகவும் பிடிக்கும், இதன் காரணமாக மான்செஸ்டர் யுனைட்டட் அணி அவனுக்கு பிடிக்கும்.

இந்த கலகலப்பானசிறுவன் தனது முழு வாழ்க்கையையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான், அவன் வளர்ந்ததும் ஒரு பொலிஸ்காரனாக வேண்டும் என்று கனவு கண்டான். ஆனால், அவனின் மரணத்தால், ஒட்டு மொத்த குடும்பமே நிலைகுலைந்து போயுள்ளது என்று கூறியுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தை அந்த சிறுவனின் தாய், பார்த்துள்ளார்.

தீவிர மோதல் புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரி Joseph Barron கூறுகையில், ஒரு பயங்கரமான மோதல், சிறுவனின் குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் உள்ளன. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒரு பெண் காவலில் இருந்தாலும், இந்த சம்பவம் குறித்து யாரேனும் தெரிந்தால், அது குறித்து அறியவும், விசாரணைக்கு அது உதவும் என்பதால், நாங்கள் அதற்காக காத்திருக்கிறோம். தகவல் உள்ளவர்கள் யாரேனும் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கூறியுள்ளார்.

மேலும், உயிரிழந்த சிறுவனின் தாயின் பெயர் Zufan Yemane (30). இவர் தென் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவர். இவருக்கு உயிரிழந்த மகனான Kidus Wendosen-ஐ தவிர 11 வயதில் Jossy என்ற மகன் உள்ளார். Zufan குடும்பத்துடன் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இவரின் கணவர் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், தற்போது மகன் உயிரிழந்த சம்பவம் அவரை ஒட்டு மொத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.