பிரித்தானிய வான் பரப்பில் தென்பட்ட நெருப்பு பந்து : வைரலாகும் காணொளி!!

375

பிரித்தானிய வான் பரப்பில்..

பிரித்தானிய வான் பரப்பில் பாரிய விண்கல் ஒன்று தென்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று இரவு 10 மணியளவில் இந்த விண்கல் தென்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது குறித்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது.

சுமார் ஏழு வினாடிகள் வரையில் இந்த விண்கல் தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பலரும் பார்வையிட்டுள்ளனர். மான்செஸ்டர், கார்டிஃப், ஹொனிடன், பாத், மிட்சோமர் நார்டன் மற்றும் மில்டன் கெய்ன்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள பாதுகாப்பு கெமராக்களில் இந்த விண்கல் பதிவாகியுள்ளது.

இங்கிலாந்து முழுவதும் விண்கல் காட்சிகளைப் பதிவு செய்ய கேமராக்களைப் பயன்படுத்தி வரும் அமெச்சூர் வானியலாளர்களின் குழுவான “The UK meteor network” இதனை ஒரு நெருப்பு பந்து என கூறியுள்ளது. இது குறித்து “American Meteor Society” கருத்து வெளியிடுகையில்,


“ஒவ்வொரு நாளும் பூமியின் வளிமண்டலத்தில் பல ஆயிரம் விண்கற்கள், நெருப்பு பந்து அளவு ஏற்படுகின்றன”, பெரும்பாலானவை கடல் அல்லது மக்கள் வசிக்காத பகுதிகளுக்கு மேல் விழுவதாக” தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வான் பரப்பில் நேற்று இரவு தென்பட்ட இந்த நெருப்பு பந்தினை பலரும் பார்த்துள்ளதாக “The UK meteor network” தெரிவித்துள்ளது.