பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்த சாயமும் பூச முடியாது: கமல்ஹாசன்!!

958

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக கறுப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு பொலிசார் நடத்திய விசாரணையில் செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அந்த வீடியோவில் பேசிய சுரேந்திரன், புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.


இதுகுறித்து டுவிட் செய்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம்.

இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது என தெரிவித்துள்ளார்.