பிரிந்து வாழ்ந்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன் கூறிய காரணம்!!

337

தமிழக மாவட்டம் திருச்சியில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் இடையத்திமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (39). பெயிண்டர் வேலை பார்த்து வரும் இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு நர்மதா என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். நர்மதா திருப்பூரின் சுக்குட்டிபாளையத்தில் உள்ள தனியார் நூல் மில் குடியிருப்பில் தங்கி, அங்கேயே வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், மனைவியை 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த சிவகுமார், தனது மகன் குருபிரசாத்தின் பிறந்தாளை கொண்டாட வெள்ளக்கோயில் சென்றுள்ளார்.

மில் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு சிறுவன் குருபிரசாத்தின் பிறந்தாளை சிவகுமார் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.

இரவு அனைவரும் தூங்கிய நிலையில் மறுநாள் காலை சிவகுமார் அவசரமாக பதற்றத்துடன் வீட்டில் இருந்து கிளம்பி சென்றுள்ளார்.


மேலும் அவரது வீட்டில் இருந்து பிள்ளைகளின் அழுகுரல் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் நர்மதா வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து காங்கேயம் காவல் நிலையில் தனது மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாக சிவகுமார் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, மனைவி நர்மதாவுடன் சண்டை ஏற்பட்டபோது, ஆத்திரத்தில் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்திக்கொலை செய்துவிட்டதாக சிவகுமார் கூறியுள்ளார்.