தனது பிறந்த நாளை நண்பர்களோடு கொண்டாடிய போது ஏரியில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பிறந்தநாள் கொண்டாட்டமே மாணவனின் உயிருக்கு எமனாக மாறியதாக உறவினர்களும், நண்பர்களும் கதறியழுதனர்.
ஜெயங்கொண்டம் அருகே கொம்மேடு பகுதியில் உள்ள பிள்ளைஏரியில் நகுலன் எனும் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவன் தனது நண்பர்களோடு சேர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டமாக குளித்து, விளையாடி மகிழ்ந்த நிலையில் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காமராஜபுரம் தகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரபூபதி. இவரது மகன் நகுலன் (16). அந்த பகுதியில் உள்ள பள்ளியொன்றில் 11ம் வகுப்பு பயின்று வந்த நகுலனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால்,
தனது நண்பர்களுடன் சேர்ந்து கொம்மேடு செல்லும் பாதையில் பிள்ளைஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பிறந்தநாளிலேயே ஏரியில் மூழ்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது