அமெரிக்காவில்…
பிரித்தானியாவைச் சேர்ந்த பாலே நடனக் கலைஞர் Orla Baxendale. 25 வயதான இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வந்தார். இங்கிலாந்தின் கிழக்கு Lancashire பகுதியைச் சேர்ந்த Baxendale, தனது நடன வாழ்க்கையை அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
Orla Baxendale-வுக்கு கடுமையான வேர்க்கடலை ஒவ்வாமை இருந்துள்ளது. இதனால் உணவுப்பொருட்களை வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் இருந்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மளிகைக் கடையில் பிஸ்கட்ஸ் வாங்கியுள்ளார். அதன் package label-யில் வேர்க்கடலை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் அந்த பிஸ்கட்டை அவர் சாப்பிட்டுள்ளார்.
ஆனால், அதில் வேர்க்கடலை கலந்திருந்ததால் Orla-வுக்கு உடனடியாக ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த அவர் EpiPen எனும் ஊசியை செலுத்திக் கொண்டபோதிலும், Anaphylactic Shock ஏற்பட்டு 11ஆம் திகதி Orla Baxendale பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து Stew Leonard-யின் மாளிகைக் கடை, Orla Baxendale-வின் இறப்புக்கு காரணமான Vanilla Florentine Cookiesஐ திரும்பப் பெற்றுக் கொண்டது. இந்த நிலையில், Orla Baxendaleவின் அதிர்ச்சி மரணத்தால் அவரது குடும்பத்தினர் கற்பனை செய்ய முடியாத பேரழிவிற்கு ஆளாகியுள்ளதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.