தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் வசித்து வருபவர் கஜேந்திரன். இவர் வீட்டின் முன் பகுதியில் கட்டட விரிவாக்க பணியை மேற்கொண்டு வருகிறார். புதிதாக கட்டப்பட்ட சுவற்றின் அருகே மின்சாதன மீட்டர் பெட்டி அமைந்துள்ளது.
இங்கு விரிவாக்க பணி நடந்த கொண்டிருக்கும் நிலையில் தண்ணீர் நனைக்கும் பொருட்டு கஜேந்திரன் மகன் 30வயது வேலாயுதம் மோட்டாரை இயக்க முற்பட்ட நிலையில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியது.
இங்கு வேலாயுதத்தின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் அருகாமையில் உள்ளவர்கள் அவரை மீட்க முயற்சித்த போது மாரியப்பன் என்ற நபரையும் மின்சாரம் தாக்கி வீசி எரியப்பட்டார்.
இதனைக் கண்ட கஜேந்திரன் வீட்டில் பணியாற்றி வந்த ரவி என்பவர் வேலாயுதத்தை காப்பாற்ற முயற்சித்த போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதாக தெரிகிறது.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் மின் ஒயர்களை அறுத்து விட்டு மின்சாரத்தை துண்டித்துள்ளனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இடஒதுக்கீட்டில் வேலைக்கு சேரும் முயற்சியில் சென்னையில் தங்கி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். உயிரிழந்த மற்றொரு நபரான ரவிக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் இருந்துள்ளனர். ரவியின் கடைசி பெண் மகள் தந்தை உயிரிழந்தது தெரியாமல் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதற்கு இன்று பள்ளி சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.