புத்தாண்டில் பிறந்த 3.7 லட்சம் குழந்தைகள்: எந்த நாட்டில் அதிகம் தெரியுமா?

645

குழந்தைகள்…

புத்தாண்டு தினத்தன்று மட்டும் உலகம் முழுதும் 3.7 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்க வாய்ப்பு உள்ளது என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுதும், ஆங்கிலப் புத்தாண்டு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கிடையே, யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம், பிறப்பு விகிதம் மற்றும் ஆயுட்காலம் குறித்த சில தகவல்கள் அடங்கிய ஆய்வறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், பிறக்கும் 2021 புத்தாண்டு தினத்தில் உலகம் முழுதும் 3.7 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இதில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் பிறந்திருக்க வாய்ப்புள்ளது.

மட்டுமின்றி அதிகபட்சமாக இந்தியாவில் 59,995 குழந்தைகள் பிறந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக சீனாவில் 35,615 குழந்தைகளும், நைஜீரியாவில் 21,439; பாகிஸ்தானில் 14,161 குழந்தைகள் பிறந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

இந்த 2021 ஆண்டில் மொத்தம் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த குழந்தைகளின் சராசரி ஆயுட்காலம் 84 ஆண்டுகளாக இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.