புத்தாண்டை முன்னிட்டு உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இலங்கையில் தேசியக் கொடி!!

755

புத்தாண்டை முன்னிட்டு..

புத்தாண்டை முன்னிட்டு உலகின் மிகவும் உயரமான கட்டிடமாக கருதப்படும் புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் இலங்கையின் தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு நாடுகளில் தேசியக் கொடிகள் புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் இன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, ஜப்பான் மற்றும் தென் கொரியா தங்களது புத்தாண்டை இரவு 7 மணிக்கு (யு.ஏ.இ நேரம்) கொண்டாடியதால் முதலில் அந்நாட்டு கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டன.


சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தேசியக் கொடிகள் இரவு 8 மணிக்கு (யு.ஏ.இ நேரம்) காட்சிப்படுத்தப்பட்டதுடன், இரவு 9 மணிக்கு (யு.ஏ.இ நேரம்) தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தேசியக் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இரவு 10.30 மணிக்கு (யு.ஏ.இ நேரம்) இந்திய மற்றும் இலங்கை நாடுகளின் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டன. பாகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் கொடிகள் இரவு 11 மணிக்கு (யு.ஏ.இ நேரம்) காட்சிபடுத்தப்பட்டன.

இதேவேளை, அதிகாலை 4 மணிக்கு (யு.ஏ.இ நேரம்) இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் செனகல் ஆகிய நாடுகளின் கொடிகள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், பிரேசில், கனடா, அமெரிக்கா, சிலி, பனாமா, கோஸ்டாரிகா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் தேசியக் கொடிகள் அதிகாலை 5 மணிக்கு காட்சிப்படுத்தப்படும் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.