தமிழக மாவட்டம் சேலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன் (22). இவரும் மேகலா (21) என்ற பெண்ணும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பூபாலன் வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
இதனை கவனித்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை தொடங்கிய நிலையில் அவரின் மனைவி மேகலா மாயமானார்.
பல்வேறு இடங்களில் அவரை தேடிய உறவினர்கள், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிடம் அருகே அதிர்ச்சி காட்சியை கண்டனர். அங்கு மேகலா தனது துப்பட்டாவினால் மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேகலாவின் உடல் கைப்பற்றப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்ததால் சிகிச்சை பெற்று வரும் பூபாலனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.