பெண்களுக்கு உணவை ஊட்டி விடும் சர்வர்கள்.. அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனம் : அதிர்ச்சி வீடியோ!!

528

சீனாவின்…

வித்தியாசமான யோசனைகளை வியாபாரத்தில் புகுத்தினால், பணம் வருகிறதோ இல்லையோ பப்ளிசிட்டி அதிகளவில் கிடைத்து விடுகிறது. அப்படித்தான் சீனாவில் புதிதாக துவங்கப்பட்ட உணவகம் ஒன்றில்,

ஆண் சர்வர்கள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் தென்கிழக்கு பகுதியான யுன்னான் மாகாணத்தில் மாச்சோ ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் உணவகம் ஒன்று உள்ளது. இங்கு ஆண் சர்வர்கள் அரைகுறையாக ஆடை அணிவதுடன் அங்கு வரும் பெண் வாடிக்கையாளர்களுடன் ஆபாசமான முறையில் நடந்து கொண்டுள்ளனர். இது குறித்து வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.


அந்த வீடியோவில் ஆண் சர்வர்கள் ஆபாசமாக நடனம் ஆடுவதும், அங்கு வரும் பெண் வாடிக்கையாளர்களுக்கு உணவுப் பொருட்களை தங்கள் வாயால் ஊட்டி விடுவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து அந்த உணவு விடுதியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது வீடியோவில் காணப்பட்டவை உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்த உணவகத்தை மூடச் சொல்லி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அந்த உணவு விடுதி செயல்பட்டு வந்துள்ளது தெரிய வந்தது.

உணவு விடுதி செயல்பட்ட காலத்தில் கிடைத்த வருமானத்தை விட பத்து மடங்கு அபராதம் உணவக உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

அந்த உணவு விடுதியின் செயலால் சமூக ஒழுக்கம் சீர்குலைந்துள்ளதாகவும், அந்த பிராந்தியத்தின் கண்ணியம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் உணவக உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

தங்கள் உணவகம் குறித்த வீடியோ வேகமாக பரவுவதை கேள்விப்பட்ட உணவக உரிமையாளர் தங்கள் உணவகத்திற்கு இலவசமாக விளம்பரம் கிடைக்கிறது என்று திளைத்திருந்தாராம். ஆனால் அந்த வைரல் வீடியோக்கள் தன் உணவகத்திற்கு மூடு விழா நடத்திவிடும் என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by 王军🇨🇳 (@wang.jun.x)