பெண்கள் விடுதிக்குள் இரவில் நுழைந்து உள்ளாடைகளை கிழித்து எறிந்து வந்த நபர்! 1 வருட மோசமான செயல் அம்பலம்!!!

861

இந்தியாவில் பெண்கள் விடுதிக்குள் நுழைந்து அவர்களின் உள்ளாடைகளை கிழித்து விட்டு செல்லும் செயலை ஒருவருடமாக செய்து வந்த நபர் ஒருவழியாக பொலிசில் சிக்கியுள்ளார்.

மத்தியபிரதேச மாநிலத்தின் இண்டோரில் உள்ள பெண்கள் விடுதிகள், பெண்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் மர்ம நபர் இரவில் நுழைவதாக பொலிசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. இதையடுத்து பொலிசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பெண்கள் விடுதிக்குள் நபர் ஒருவர் நுழைவதாக வந்த தகவலையடுத்து பொலிசார் அங்கு வந்து சுற்றி வளைத்து அவரை பிடித்தனர். விசாரணையின் அவர் பெயர் ஸ்ரீகாந்த் என தெரியவந்தது.

கடந்த ஒரு வருடமாக ஸ்ரீகாந்த் பெண்கள் விடுதிக்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டுள்ள அவர்களின் உள்ளாடைகளை கிழித்து எறிவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.


பின்னர் பெண்கள் கண்விழித்தவுடன் அங்கிருந்து தப்பி சென்றுவிடுவார்.

ஏற்கனவே பாதுகாவலராக பணிபுரிந்த ஸ்ரீகாந்த் அதன் மூலம் எங்கெல்லாம் பெண்கள் விடுதி உள்ளது என்பதை தெரிந்து வைத்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பெண்களிடம் ஸ்ரீகாந்த் தவறாக நடந்து கொண்டாரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.