பெப்சி நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு… வெளிவந்த தகவல்!

993

சீனாவில் பெப்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நிறுவன பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தங்கள் நிறுவனத்தின் குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டி பொருட்கள் பாதுகாப்பானவை என சீனாவில் உள்ள பெப்சியின் கிளை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அந்நாட்டில் தான் கொரோனா முதன் முதலில் படையெடுத்து வந்தது. பின்னர், சற்று கொரோனா வைரஸ் பரவாமல் குணமடைந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் வைரஸ் விஸ்பரூபம் எடுத்துள்ளது.


இதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், பீஜிங்கில் உள்ள பெப்சி நிறுவனத்தில் உணவு பதப்படுத்தும் துறையில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகவல் அங்கு பணிபுரியும் நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து , முன்னச்சரிக்கை நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் அனைத்து பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நோய் தொற்று அதிகரித்துள்ள பீஜிங்கில் உணவு விநியோக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றின் ஊழியர்களை குறிவைத்து அதிக அளவிலான கட்டுப்பாடுகள் மற்றும் பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் அனைவரும் தற்காலிகமாக வேலையிழந்து தவித்து வருகின்றனர்.