பெற்றோர் முன்னிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள்..! பொலிஸார் வெளியிட்ட தகவல்!

917

கண்டி, கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொல்ல பாலத்தில் குதித்து நேற்று இரண்டு பாடசாலை மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டனர்.

நேற்று அதிகாலை 5.45 மணியளவில் இந்த மாணவர்கள் பாலத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெற்றோரின் முன்னிலையில் குறித்த இருவரும் பாலத்திலிருந்து குறித்து தற்கொலை செய்துள்ளனர். காதல் விவகாரம் தொடர்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 15 வயதான ஷாமலி ஹர்ஷனி ரத்நாயக்க என்ற 15 மாணவியும் 16 வயதான அகில விஜேரத்ன என்ற மாணவனுமே உயிரிழந்துள்னர். இவர்கள் அந்தப் பகுதியிலுள்ள பாடசாலையில் 10 மற்றும் 11ஆம் தரத்தில் கல்வி கற்றுள்ளனர்.

இந்த மாணவி மற்றும் மாணவன் சில காலங்களாக காதல் தொடர்பில் இருந்துள்ளனர். இந்நிலையில் குறித்த இருவரும் காணாமல் போயுள்ளனர்.


மாணவர்களை பெற்றோர்கள் இரவு முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில் அதிகாலை கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதன்போது குறித்த மாணவர்கள் இருவரும் குறித்த பாலத்தில் நிற்பதாக தகவல் கிடைத்துள்ளது. மாணவர்களின் பெற்றோர் உடனடியாக அவ்விடத்திற்கு சென்ற போது பாலத்திற்கு நடுவில் இருவரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

திடீரென குறித்த இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடியே பெற்றோர் கண் முன்னால் பாலத்திற்குள் குதித்ததுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். பெற்றோரின் கூச்சல் சத்தத்தை கேட்டு அவ்விடத்திற்கு வந்த பிரதேச மக்கள் மாணவர்களின் சடலத்தை மீட்டுள்ளனர்.