பேயுடன் 20 ஆண்டுகளாக தினமும் இரவில் உறவு கொண்ட பெண்.. இறுதியில் கூறிய அதிர்ச்சி விடயம்!!

168814

கொலம்பியாவில்…

கொலம்பியா நாட்டைச் சேர்ந்த பாவோலா ஃப்ளோரெஸ் என்ற பெண் தொலைக்காட்சியில் கொடுத்த நேர்காணல் வைரலாகியுள்ளது. அவர் கூறிய விடயம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதுடன் விவாத பொருளாகவும் மாறியுள்ளது. அதாவது பாவோலா 20 ஆண்டுகளாக பேயுடன் உடலுறவு வைத்திருந்தாராம்.

அதுவும் அந்த பேய் உறவுக்கு தன்னை அழைக்கும் என்றும் பகீர் கிளப்பியுள்ளார். இதுதொடர்பாக நேர்காணலில் அவர் கூறியதாவது, ‘இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. நான் சிறு பெண்ணாக இருக்கும்போது படுக்கையில் எனது காலில் தொடங்கி மார்பு வரை யாரோ தொடுவது போல் உணர்ந்தேன். அது விசித்திரமாக இருந்ததால் எனக்கு பயமாக இருந்தது.

ஆனால் அது பழகிவிட்டது. அந்த பேய் என்னுடன் உடலுறவு கொண்டது 20 ஆண்டுகளாக தொடர்கதையாகி விட்டது. தினமும் அது இரவில் வந்து என்னை அழைக்கும். நானும் அதனை அனுபவிக்க தொடங்கினேன். அதனை நான் நேரில் பார்க்காமல் இருந்தேன். ஆனால் சமீபத்தில் அது மாறியது.


அந்த பேய் என்னிடம் நேரில் வந்தது. அதன் முகத்தை பார்த்தேன். கோரைப்பற்களுடன் மிகவும் கொடூரமாக இருந்தது. அதை நேரில் பார்த்த உடனேயே இனிமேல் அந்த உறவை முடித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதனைத் தொடர்ந்து பேயுடன் உறவு கொள்வதையும், பேசுவதையும் நிறுத்திவிட்டேன்’ என கூறினார்.

பாவோலாவின் நேர்காணல் ட்ரெண்டாகி வரும் நிலையில், உளவியலாளர்கள் இது ஒரு மனநல பாதிப்பு என்று கூறுகின்றனர். மேலும் 20 ஆண்டுகளாக தொடர்வது என்பது தனித்துவமானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.