போதைப்பொருளுடன் கைதானவருக்கு மரண தண்டனை!

1081

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க கனேபொலவினால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

14 கிராம் 76 மில்லிகிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிரதிவாதி கைது செய்யப்பட்டிருந்தார்.


கொழும்பு – மருதானை பகுதியில் பபா என்றழைக்கப்படும் துவான் இஷான் சஹாப்தீன் என்ற குறித்த சந்தேகநபர் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.