மகனின் குழந்தையை வயிற்றில் சுமந்த 56 வயது தாய்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

347

அமெரிக்காவில்..

பொதுவாக, ஒரு குடும்பம் என்றாலே அதில் தாத்தா, பாட்டியின் பங்கு சற்று அதிகமாகவே இருக்கும். அதில், குழந்தைகளுக்கு இன்னும் அதிகமாகவே இருக்கும். ஆனால், இங்கு ஒரு குடும்பத்தில் பாட்டியின் பங்களிப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உட்டா மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அங்கு வசிக்கும் நான்சி என்ற 56 வயதாகும் பெண் ஹேக் வெப் டெவலப்பராக இருந்து வருகிறார். இவருக்கு ஜெஃப் என்ற மகனும், கேம்ப்ரியா என்ற மருமகளும் இருக்கின்றனர். இதில் நான்சி, மகனின் குழந்தைக்கு வாடகைத்தாயாக மாறியுள்ளார்.

மருமகள் கேம்பரியாவால் கருத்தரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் நான்சி வாடகைத் தாயாக மாறியுள்ளார். அவருக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹன்னா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.


தற்போது, தனது மகன் மற்றும் மருமகளுடன் நான்சி மகிழ்ச்சியாக உள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்களை நான்சி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆனாலும் தற்போது இது கவனத்தை பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Nancy Hauck (@nancyhauck)