எகிப்தில்…
எகிப்து நாட்டில் ஹனா மொஹமட் ஹசன் என்பவர் தனது மகனை திட்டமிட்டு கொலை செய்துள்ளார் என குற்றம்சாற்றப்பட்டு கைதுசெய்யப்படுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹனா மொஹமட் ஹசன் என்பவர் தனது மகனை கொலை செய்து கொதிக்கும் நீரில் சமைத்து சாப்பிட்டதாக அவரது உறவினர்கள் புகார் செய்துள்ளனர்.மேலும் அந்த சிறுவனின் உடற்பாகங்கள் வீட்டில் உள்ள வாலியில் இருந்ததாகவும்,
அதை புதைப்பதற்குள் பொலிஸார் கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.கொலை செய்த தாயார் மனநிலை பாதிக்கப்பட்டவர் இல்லை என்பது விசாரணையில் உறுதியானது.
தனது மகன் காலம் முழுவதும் என்னுடைய மகன் என்கூடவே இருக்க வேண்டும் என்று தான் அவனை கொலை செய்து தலையை சாப்பிட்டேன் என்று தனது கருத்தை அந்த பெண்மணி கூறியுள்ளார்.