கேரளாவில்..
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் குற்றிக்காட்டூர் ஊரை சேர்ந்தவர் சபீஷ் (வயது 37). தனியார் வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக இவர் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ஷீனா இவரும் எஸ்.பி.ஐ வங்கியில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஹரி கோவிந்த் (வயது 6), ஸ்ரீவர்தன் (வயது 2) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவருமே நல்ல வேலையில் இருப்பதால் அவர்களுக்கு கை நிறைய சம்பளம் வந்துள்ளது.
இதனால், வசதிக்கு சற்றும் குறைவு இல்லை. அண்மையில் ஷினா எஸ்.பி.ஐ வங்கியில் மேலாளராக பதவி உயர்வு பெற்றார். இந்த நிலையில், வழக்கம் போல ஷீனாவுக்கு அவரது தந்தை நாராயணம் போன் செய்துள்ளார்.
ஆனால் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து போன் போட்ட போதும் யாரும் எடுக்காததால் பதற்றம் அடைந்த தந்தை நாராயணன் என்ன ஆனதோ.. ஏது ஆனதோ என பயந்து மலப்புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்த தகவலின் பேரில் மலப்புரம் போலீசார், ஷீனா வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு கண்ட காட்சி போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்தது. ஷீனா மற்றும் அவரது கணவர் சபீஷ் ஒரு அறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளனர்.
மற்றொரு அறையில் இரண்டு பிள்ளைகளும் இறந்த நிலையில் கிடந்தன. உடனடியாக நான்கு உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிள்ளைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு கணவனும் மனைவியும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என முதல் கட்ட தகவலின் அடிப்படையில் போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் வீட்டை ஆய்வு செய்ததில் வீட்டில் சில மெடிக்கல் குறிப்புகளும் இருந்தன. இவற்றை ஆராய்ந்து பார்த்ததில் தற்கொலை செய்து கொண்ட சபீஷுக்கு தசை சிதைவு நோய் இருந்துள்ளது.
சமீபத்தில் இந்த நோய் பாதிப்பு இருப்பது அவருக்கு தெரிய வந்து இருக்கிறது. மகன் ஸ்ரீவர்த்தனுக்கு இதே தசை சிதைவு நோய் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
உடல் நல பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் இந்த விபரீத முடிவை கணவன் மனைவி இருவரும் எடுத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையாக இருக்குமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நன்கு படித்து நல்ல வேலையில் இருந்த போதும் வசதிக்கும் குறைவு இல்லாமல் வாழ்ந்த தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரள மக்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.