பள்ளி விழாவில் ஒன்றில் தன்னுடைய மகளான அனோஷ்கா ஆடுவதை கீழிறிருந்து அஜித் ரசிக்கும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித்.
சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் தன்னம்பிக்கையால் உச்சத்தை தொட்டவர் என ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் சுஷாந்த் சிங் மரணமடைந்தபோது கூட அஜித்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள், தற்கொலை முடிவுக்கு செல்ல வேண்டாம் என பலரும் அறிவுரை கூறியிருந்தனர்.
படத்தில் மட்டுமின்றி நேரிலும் மிக நேர்மையான, பாசமான தந்தை, மற்றவர்களை மதிக்ககூடியவர் என்றெல்லாம் அவருடன் நடித்தவர்கள் புகழ்வார்கள்.
அவரது குணம், மற்றவர்களை நடத்தும் விதம், அனைவருக்கும் மரியாதை கொடுப்பது, சக நடிகர்கள் முதல் லைட்மேன் வரை அனைவரிடமும் பணியாக பேசுவது என அவரது பல குணங்களை பற்றி நெகிழ்ச்சியாக பேசி நாம் கேட்டிருப்போம்.
சினிமாவுக்கு ஒதுக்கும் நேரத்தை போலவே தன்னுடைய குடும்பத்திற்கும் அதிக நேரம் செலவிட தவறுவதில்லை அஜித்.
அவர் தன்னுடைய குழந்தைகளுடன் இருக்கும் பல்வேறு வீடியோக்கள் இதற்கு முன்பு வைரலாகி இருக்கின்றன. மகள் அனுஷ்கா உடன் பள்ளியில் அஜித் டயர் ஓட்டிய வீடியோ இதற்கு முன்பு மிக அதிக அளவில் வைரல் ஆகி இருந்ததை பார்த்திருப்போம்.
He Is A Good Father In Real Life Also ❤️❤️#Valimai pic.twitter.com/ou6s0rc03W
— Ajith Seenu 2 ? தல… தாய்.. தாரம்… (@ajith_seenu) July 2, 2020
அது போல தற்போது பள்ளி நிகழ்ச்சியில் அவரது மகள் அனோஷ்கா மேடையில் நடித்துக் கொண்டிருப்பதை அஜித் நின்று ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அனோஷ்கா முயல் போல வேடமிட்டு பள்ளி விழாவில் மேடையில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதை வியந்து பார்க்கும் சாதாரண ஒரு தந்தையாக அஜித் அங்கு நின்று கொண்டிருக்கிறார்.