மகளை விட்டு விட்டு பெட்ரோலுக்கு பணம் கொடுக்க சென்ற தாய்: அடுத்து நடந்த சில்லிடவைக்கும் சம்பவம்!!

513

உக்ரைனில் பெண் ஒருவர் பெட்ரோலுக்கு பணம் கொடுக்க சென்ற நேரத்தில், அவரது மகளை ஏமாற்றி ஒருவர் காரில் கடத்திச் சென்ற சம்பவம் காண்போரை சில்லிடச் செய்கிறது.

Boryspil என்ற இடத்தில் Elizaveta Kolisnichenko என்ற பெண் காருக்கு பெட்ரோல் போட்டு விட்டு பணம் செலுத்துவதற்காக மேலாளர் அறைக்கு சென்றுள்ளார்.

அப்போது, ஒருவர் வந்து பொம்மைகளைப் பார்த்துக்கொண்டிருந்த Elizavetaவின் மகள் Elizaveta Kolisnichenko (4)ஐ மெதுவாக தனது காருக்குள் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.

Elizavetaவின் தந்தையும் காரிலிருக்க, தாய் வந்து மகளைத்தேட, அவளைக் காணாததால் பதறிப்போய் பொலிசாரிடம் புகாரளித்துள்ளனர் அவளது பெற்றோர்.


சம்பவ இடத்திலிருந்த CCTV கமெரா ஒன்றில் அந்த நபர் குழந்தை Elizavetaவைக் கடத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது தெரியவர, பொலிசார் அந்த காரை தேடத்துவங்கினர். தீவிர தேடலுக்குப்பின், இரண்டு மணி நேரத்தில் அந்த நபரையும் Elizavetaவையும் Boryspil விமான நிலையத்திற்கருகில் கண்டுபிடித்துள்ளனர் பொலிசார்.

விசாரணையில், அந்த 29 வயது நபர் குற்ற நோக்கத்திற்காக அந்த சிறுமியை கடத்தியதை ஒப்புக்கொண்டார். சிறுமி பத்திரமாக அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அந்த கடத்தல்காரனை பிடிக்க உதவியதற்காக பொலிசாருக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட பொலிஸ் துறைத்தலைவரான Andrey Nebytov, மிக பயங்கர பாலியல் குற்றம் ஒன்று தடுக்கப்பட அவர்கள் உதவியுள்ளதாக தெரிவித்தார். சிறுமியைக் கடத்திய நபர் உடனடியாக காவலில் அடைக்கப்பட்டார்.