அண்ணாநகரில் இயங்கும் மசாஜ் மையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் திடீரென கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,
“அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான சிறப்புக் குழுவிற்கு அண்ணாநகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு ஸ்பா மற்றும் மசாஜ் மையத்தில் பாலியல் தொழில் செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்று கண்காணித்தபோது, அங்கு பெண்கள் பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெண் காவலர்கள் உட்பட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினர்.
இதில், மசாஜ் மையத்தின் உரிமையாளரான திருவொற்றியூர் திருச்சினாங்குப்பத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி பிரேமா (30) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிரேமாவிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், பாலியல் தொழிலுக்காக வைக்கப்பட்டிருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பிரேமா விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்,” என்று போலீசார் தெரிவித்தனர்.