மட்டக்களப்பில் மக்களை மிரட்டப்படும் பிள்ளையான் குழு! வெளியானது அதிர்ச்சி வீடியோ..!

1046

த.தே.கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பிள்ளையான் குழுவால் மிரட்டப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது

செங்கலடியில் பிள்ளையான் குழு வேட்பாளர் அரஸ் மாஸ்ரர், கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் மோகன் என்று அழைக்கப்படும் சுபாஸ் சந்திரதாஸ், களுவன்கேணியைச்சேர்ந்த தேவன் ஆகியோர் இந்த கொலை அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

படகு சின்னத்திற்கே அனைவரும் வாக்களிக்க வேண்டும், இல்லையேல் 6ஆம் திகதிக்கு பின்னர் உங்களுக்கு மருந்து கட்டுவோம் என அச்சுறுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

EPXK 8932 என்ற இலக்க மோட்டார் சைக்கிளில் வந்த மோகன் என்பவர் திங்கள் காலை செங்கலடி சந்தியில் வைத்தும், தமது வீட்டிற்கு வந்தும் தம்மை அச்சுறுத்தி விட்டு சென்றதாக செங்கலடியை சேர்ந்த பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.


எனினும் அவ்வூரைச்சேர்ந்த பெண்கள் அவரை ஏசி விரட்டியதாக கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை களுவன்கேணியை சேர்ந்த ஓடாவி தேவன் என்பவர் தமது வீட்டிற்கு வந்து படகு சின்னத்திற்கு தான் வாக்களிக்க வேண்டும், இல்லையேல் ஊரைவிட்டு விரட்டுவோம் என அச்சுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல் பிள்ளையான் குழு வேட்பாளர் அரஸ் மாஸ்ரர் என்பவர் தமது வீடு தேடி வந்து படகுக்குத்தான் போட வேண்டும், இது படகுக்குரிய ஊர், வேறு கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது என அச்சுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

அரஸ் மாஸ்ரர் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முதல் செங்கலடியில் வர்த்தகர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. எனினும் பிள்ளையான் குழு அந்த வர்த்தகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து அந்த முறைப்பாட்டை அவர் வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது.