மது ஊற்றிக் கொடுத்து, கணவனை கம்பியால் அடித்துக் கொலைச் செய்து அதிர வைத்திருக்கிறார் இளம்பெண் ஒருவர். மது போதையில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே கணவர் உயிரிழந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவனுக்கு மது ஊற்றிக் கொடுத்து மனைவியே கொலைச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூனேவைச் சேர்ந்தவர் ரவீந்திர காசிநாத் கபூர். இவரது மனைவி ஷோபனா ரவிந்திர கபூர். இதில் ஷோபனா, 41 வயதுடைய நபர் ஒருவருடன் தகாத உறவில் இருந்துள்ளார்.
இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த விவகாரம் ரவீந்திராவுக்கு தெரிய வந்ததால் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இதன் காரணமாக தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்துக் கொண்டு, தனது கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
அதன்படி ரவீந்தராவுக்கு மது ஊற்றிக் கொடுத்து, அவர் போதையில் தூங்கிக் கொண்டிருந்த போது, ஷோபனாவின் கள்ளக்காதலன் கரண்டியால் தலையில் கொடூரமாக அடித்து கொலை செய்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரவீந்தரா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவருடைய மனைவி மற்றும் கள்ளக்காதலனை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் ரவீந்திராவின் நெருங்கிய நண்பர் அவருடைய மனைவியுடன் தகாத உறவில் இருந்தனர்.
அத்தோடு அவருக்கு சம்பவ நாளில் மது ஊற்றி கொடுத்து கொலை செய்தது தெரிய வந்தது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.