மனிதர்களை போன்று வீடியோ கேம் விளையாடும் குரங்கின் வைரல் வீடியோ!!

712

குரங்கு…………

குரங்கு ஒன்று MindPong வீடியோ கேம் விளையாடும் வீடியோவை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலன் மாஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை எலன் மாஸ்க் நடத்திவருகிறார்.

இந்நிறுவனம் மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.


அதனொரு பகுதியாக telepathy முறையில் இயந்திரத்தின் செயல்பாட்டை உணர்ந்து அதன் அடிப்படையில் குரங்கை விளையாட வைத்துள்ளனர். சிறப்பாக விளையாண்டதற்காக பேஜர் (pager)என்ற அந்த குரங்குக்கு வாழைப்பழம் பரிசாக வழங்கப்பட்டது.