மனைவிக்கு பிடிச்சவனை திருமணம் செய்து வைத்த கணவர்!!

53

மனைவிக்கு பிடிச்சவனையே திருமணம் செய்து வைத்த கணவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் பப்பு.

இவர் தன்னுடைய மனைவியின் காதலனை தன்னுடைய மனைவிக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பாபுவிற்கு திருமணமாகி 2 குழந்தைகள்.

இந்நிலையில் இவருடைய மனைவி அதே ஊரை சேர்ந்த தன்னைவிட மிகவும் இளைய வயதுடைய ஒருவரை ரகசியமாக காதலித்து வந்தார். இந்த உறவு குடும்பத்தாருக்கு தெரிய வந்த நிலையில் கண்டித்துள்ளனர்.

இருப்பினும் தன்னுடைய மனைவியின் ஆசையை மதித்த பப்லு தானாகவே மனைவியை விட்டு விலகி இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார்.

இது குறித்து வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலரும் எதிர்ப்புக்களை பதிவிட்டு வருகின்றனர்.