மனைவியின் கண்கள், கன்னங்களை கடித்து துப்பிய கணவனின் கொடூர செயல்!!

376

கர்நாடகாவில்..

கர்நாடகா மாவடத்தில் ஷிஷிலா கிராமத்தில், குடிபோதையில் கணவர் ஒருவர் மனைவி மற்றும் மகளை, கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சுரேஷ் கவுடா ஷிஷிலா கோட்டேபாகிலுவில் வசித்து வருகிறார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியை அடிப்பது வழக்கமான ஒன்றாகி இருந்தது.

இதனால் கணவன் மனைவியிடையே தினமும் சண்டை, சச்சரவு, தகராறு தான். வழக்கம் போல் அன்றும் குடித்துவிட்டு முழு போதையில் இருந்தார். கணவன் மனைவிக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் சுரேஷ் கவுடா மனைவியின் கண் மற்றும் கன்னத்தை கடித்து சதையை கடித்து துப்பி விட்டார். அலறித்துடித்த மனைவியை கட்டையால் அடித்து கொடூரமாக தாக்கினார்.

இதனால் மனைவியின் இடது கண் முற்றிலும் சேதமடைந்தது.தாயின் அலறல் சத்தம் கேட்டு அவர்களது மகள் இதனை தடுக்க வந்தாள் . போதையில் இருந்த சுரேஷ் கவுடா மகளின் தலை மற்றும் கண்களிலும் தாக்கியுள்ளார். உயிரைக் காப்பாற்றுவதற்காக தந்தையிடம் இருந்து தப்பிச் சென்ற அவர், அக்கம்பக்கத்தினரிடம் விசயத்தைக் கூறி தாயை காப்பாற்ற உதவி கோரினார்.


அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்ததால் கணவர் சுரேஷ் கவுடா பின்வாசல் தோட்டம் வழியாக தப்பி குதித்து ஓடி விட்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயம் அடைந்த தாயும், மகளும் மீட்உஜிராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் தப்பி ஓடிய சுரேஷ் கவுடாவும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.