மனைவியின் தாலியை அறுத்து எரிந்த கணவன்!!

112

சமூக வலைதளங்களில் தினசரி ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. மனைவி ஒருவர் வெளிப்படையாக அந்நிய உறவில் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்த கணவன், அவமானத்தால் அவரது கழுத்திலிருந்த தாலியை அறுத்து விட்டு உறவை முறித்துக் கொண்டார்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியுள்ள வீடியோவின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.

தனது மனைவியின் செல்போனில், மற்றொரு இளைஞருடன் அவள் உரையாடிய காதல் மெசேஜ்களை பார்த்தார். ஆத்திரத்தில் கணவர், அதைக் கண்டித்து மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அவர் உறவை முறிக்க முடிவு செய்துவிட்டு, மனைவியின் கழுத்திலிருந்த மாங்கல்யத்தை தானாகவே அறுத்து, உறவை முறித்து விட்டதாக அறிவித்தார்.

இதுவரை இந்த தம்பதியின் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், வீடியோ வைரலான நிலையில், இது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.