டெல்லி மாநிலம் சாஸ்திரி பார்க் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் மனைவியுடன் கையும் களவுமாக பிடிபட்ட காதலனை பெண்ணின் கணவர் சித்ரவதை செய்து கொன்றுள்ளார்.
விரலில் உள்ள நகங்களை வெட்டி கொடுமை படுத்தியுள்ளார். இதுகுறித்து வடகிழக்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ராகேஷ் பவேரியா கூறுகையில், “நேற்று காலை 11 மணியளவில்,
அவரது காதலர் தனது மனைவியுடன் அவரது வீட்டில் பிடிபட்டபோது, அந்த பெண்ணின் கணவர் கோபமடைந்து தனது மனைவியையும் ரித்திக் வர்மாவையும் (காதலர்) கடுமையாக தாக்கினார்.
இதுகுறித்து படுகொலை செய்யப்பட்ட ரித்திக் வர்மாவின் மாமா கூறுகையில், ரித்திக்கின் நகங்கள் வெட்டப்பட்டு கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டதாகவும், உடலின் ஒவ்வொரு பகுதியிலும் காயங்கள் இருப்பதாகவும் கூறினார்.
சம்பவம் நடந்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர், கொலை குறித்து கூறும்போது, ”ரித்திக் மற்றும் அவரது மனைவி இருவரையும் கடுமையாக தாக்கினார். ரித்திக்கை ஒன்றுக்கும் மேற்பட்டோர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
ரித்திக் டெம்போ ட்ரைவராக பணியாற்றி வருகிறார். அவர் பெற்றோருக்கு ஒரே ஒரு மகன்’ என கூறினார். சம்பவ இடத்திலேயே பலத்த அடிபட்ட ரித்திக்கை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதன்பிறகுதான் போலீஸ் அதிகாரிகள் வந்தனர். சிகிச்சை பலனின்றி இரவு 9 மணியளவில் ரித்திக் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.