மனைவி உயிரிழந்த சோகம்… அதே மருத்துவமனையில் கணவரும் தற்கொலை!!

331

மனைவி உயிரிழந்த அதிர்ச்சியில் அதே மருத்துவமனையில் கணவரும் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் கேரள மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் மஞ்சுமேல் தனியார் மருத்துவமனையின் எக்ஸ்ரே அறைக்குள் மனைவி இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் அவரது கணவரும் உயிரிழந்தார்.

ஆலங்காட்டைச் சேர்ந்த இம்மானுவேல் (29) என்பவர் தனது மனைவி மரிய ரோஸ் (21) இறந்ததால் மனமுடைந்து வாழ்க்கையை முடித்துக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

சனிக்கிழமை மாலை மரியா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில், இம்மானுவேல் அவரை அருகில் உள்ள மஞ்சுமேலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், இரவு 10.30 மணியளவில் சிகிச்சைப் பலனளிக்காமல் மரிய ரோஸ் உயிரிழந்தார்

போலீசாரின் கூற்றுப்படி, நேற்று அதிகாலை 3 மணியளவில் அதே மருத்துவமனையின் எக்ஸ்ரே அறையில் இம்மானுவேல் தூக்கில் தொங்கிய நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் கண்டனர். பெண்ணின் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

கடந்த 28 நாட்களுக்கு முன்பு மரியாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தையும் உள்ளது. மரியாவுக்கும் இம்மானுவேலுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடந்தது.


இயற்கைக்கு மாறான மரணத்திற்காக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 194யைப் பயன்படுத்தி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.