மனைவி தற்கொலை செய்து கொண்டதாக மகனுடன் சேர்ந்து அழுத கணவன்! விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!

1061

இந்தியாவில் பெண்ணை அவரின் கணவனும், மகனும் சேர்ந்து கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகம் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராமா. இவர் மனைவி பார்வதி. இந்த தம்பதிக்கு நந்தலால் என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் நேற்று காலையில் ராமாவும், நந்தலாலும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் சென்று பார்வதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அழுதுள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பார்வதியின் சடலத்தை கைப்பற்றினார்கள், அப்போது ராமாவின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.


இதையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது தினமும் ராமா மது அருந்திவிட்டு வந்து பார்வதியிடம் சண்டை போடுவார் என அவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து ராமாவிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்படி விசாரணையில், மகனுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.

அதன்படி கழுத்தை நெரித்து பார்வதியை கொன்று விட்டு இருவரும் சேர்ந்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது. பார்வதி தினமும் ஊர் சுற்றி கொண்டிருந்ததோடு தங்களுக்கு உணவு கூட சமைத்து தரமாட்டார் அதனால் தான் கொன்றேன் என ராமா கூறினார்.

ஆனால் ராமாவுக்கு பார்வதி நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது, இதையடுத்து அவரை மகனுடன் சேர்ந்து கொன்றது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து தந்தை, மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.