மனைவி பிரிந்து சென்ற சோகம் : இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

120

தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி, திருச்செந்தூர் ரோடு மேம்பாலம் அருகில் வசிப்பவர் மூக்காண்டி மகன் ஆறுமுகம்.

ஆட்டோ டிரைவரான இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில், இவரது மனைவி ஆறுமுகத்தை விட்டுப் பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனைவி இல்லாமல் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தொடர்ந்து ஏற்பட்ட மன அழுத்தத்தில் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து அவரது மகள் முனீஸ்வரி தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, ஆறுமுகத்தின் சடலத்தைக் கைப்பற்றி,

அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப் பதிந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.