மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட இளைஞனுக்கு நேர்ந்த சோகம் : தகாத உறவால் நடந்த விபரீதம்!!

380

கர்நாடகா….

கர்நாடகா மாநிலம், யாதகிரி தாலுகா எஸ்.ஹோசல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர ரெட்டி(25). இவர் நேற்று மாலை திடீரென மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த யாதகிரி போலீஸார், சந்திரசேகர ரெட்டி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், தற்கொலை செய்வதற்கு முன் சந்திரசேகரரெட்டி எழுதிய கடிதம் போலீஸிடம் சிக்கியது.

அதில், எனது சாவுக்கு எரண்ணா மற்றும் 8 பேர் தான் காரணம் என அவர்களின் பெயர்களையும் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த எரண்ணா என்பவரின் மனைவியுடன் சந்திரசேகர ரெட்டிக்கு தகாத உறவு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.


இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரசேகர ரெட்டியை எரண்ணா மற்றும் அவரது குடும்பத்தினர் மரத்தில் கட்டி வைத்துத் தாக்கியுள்ளனர். அதைத் தடுக்க முயன்ற சந்திரசேகர ரெட்டியின் குடும்பத்தினரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சந்திரசேகர ரெட்டி தூக்கிட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக யாதகிரி ஊரக காவல் நிலையத்தில் சந்திரசேகர ரெட்டியின் குடும்பத்தினர் புகார் செய்தனர். எரண்ணாவின் குடும்பத்தினரால் தான் சந்திரசேகர ரெட்டி தற்கொலை செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் எரண்ணா குடும்பத்தினர் கிராமத்தை விட்டு தலைமறைவாகியுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் யாதகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.