மருத்துவமனை முன்பு உயிருக்கு போராடிய சுவிஸ் பெண்மணி பரிதாப மரணம்: அதிர்ச்சி பின்னணி!!

351

சுவிட்சர்லாந்தின் Fribourg மண்டலத்தில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தவறியதால் மருத்துவமனை முன்பு பெண் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

Fribourg மண்டலத்தில் Tafers பகுதியிலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்ட தமது மனைவியை அழைத்துக் கொண்டு இரவு நேரம் ஒருவர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

மருத்துவமனை செல்லும் வழியிலேயே குறித்த பெண்மணியின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. மட்டுமின்றி சுயநினைவை இழந்த நிலையில் அவர் பரிதாபமாக இருந்துள்ளார்.

ஆனால் அவர்களுக்கு மருத்துவமனையில் அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவமனையில் அவசரப்பிரிவு மூடப்பட்டிருந்துள்ளது. உள்ளிருக்கும் மருத்துவர்களை அல்லது செவிலியர்களை அழைக்கும் பொருட்டு அழைப்பு மணி உள்ளிட்ட எந்த வசதியும் அவரால் அந்த அவசரத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போனது.


இதனிடையே, ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவி மருத்துவர் அவரைக் கவனிக்கும் வரை, தங்களின் மீது கவனத்தை ஈர்க்க அவர் கடுமையாக முயற்சி செய்துள்ளார். அந்த உதவி மருத்துவரும் செவிலியரும் உடனடியாக குறித்த பெண்மணிக்கு அவசர சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல், அவர் மருத்துவமனையிலேயே பரிதாபமாக மரணமடைந்துள்ளார். கொரோனா பரவல் ஏற்பட்டதன் பின்னர் குறித்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவானது மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த தகவலை உரிய முறையில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. மட்டுமின்றி அறுவை சிகிச்சை பிரிவும் மொத்தமாக மூடப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பொதுவாக அவசர அழைப்பு இலக்கமான 144-கு அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதனால் நோயாளிக்கு தேவையான மருத்துவ உதவிகளை அவர்கள் மருத்துவமனை வந்து சேரும் முன்னரே தங்களால் ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும் என்றார் மருத்துவமனை முதன்மை நிர்வாகி.

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் நாடி வந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தியுள்ளது கண்டனத்துக்கு உரியது என கூறிய அந்த மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் ஒருவர்,

அவசரப்பிரிவு இரவில் மூடப்பட்டிருக்கும் என பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியது முறைப்படி முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.,