மருத்துவ கல்லூரி பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்!!

166

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல் மருத்துவர், வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பல் மருத்துவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஷிபுலால். இவரது மனைவி டாக்டர் சோனியா (31).

தனது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அப்போது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்து தீயணைப்பு படையினர் உள்ளே நுழைந்து மருத்துவமனைக்கு சோனியாவை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.


சோனியாவுக்கு கணவருடன் பிரச்சனை இருந்து வந்ததாகவும், இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.  வட்டப்பாறையில் உள்ள தனியார் பல் மருத்துவமனை கல்லூரியில் இணை பேராசிரியையாக சோனியா பணிபுரிந்து வந்துள்ளார்.