மருத்துவ குணங்கள் நிறைந்த சீரகம்.. சர்க்கரை நோயாளிகளே கவனம்!

1252

“சீரகம்”இது சாதாரணமாக அனைவரும் பயன்படுத்த வேண்டிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்றென்று நாம் அறிந்தது தான்.

ஆனால் எதுவும் அளவோடு இருக்க வேண்டும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அளவிற்கு அதிகமானால் சீரகமும் ஆபத்து என்பது தெரிய வந்துள்ளது.

உணவில் அன்றாடம் சீரகம் சேர்த்துக் கொள்வதால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் அழிக்கப் படுவதுடன் இரத்தம் தூய்மையாகிறது.

அத்துடன் சர்க்கரை நோயாளிகள் சீரகம் பயன்படுத்துவது நல்லது என்று கூறப் படுகிறது, அத்துடன் உடல் எடையை குறைக்க விரும்புவார்கள் சீரக தண்ணீர் குடித்து வரலாம்.


இப்படி ஏராளமானவற்றை சொல்லிக் கொண்டு போனாலும் உணவில் அதிக அளவாக சீரகம் அல்லது சீரகத் தூள் சேர்த்துக் கொண்டால் நெஞ்செரிவு ஏற்படுமாம், அத்துடன் வாந்தி, வயிற்று வலி போன்றவை ஏற்படுமாம்.

அத்துடன் சிலருக்கு உடலில் சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும் இவர்கள் சீரகத்தை பயன்படுத்தினால் சர்க்கரையின் அளவு நன்றாக குறைந்து விடுமாம்.

அதனால் சீரகத்தையும் அளவோடு சாப்பிடுவோம்…ஆரோக்கியத்துடன் இருப்போம்.