மருமகனுடன் தகாத உறவு.. கள்ளக்காதலி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிப்பு!!

255

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் செல்வி (45). இவருக்கு நாகவல்லி என்ற மகள் உள்ளார். செல்வி கணவர் ஆறுமுகத்திடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 25 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டார். இந்நிலையில், அந்த பெண் தற்போது புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சுப்ரமணி (60) என்பவருடன் வசித்து வருகிறார்.

செல்வியின் மகள் நாகவள்ளிக்கும் சென்னை பட்டாளம் ராமானுஜம் கார்டன் பகுதியைச் சேர்ந்த டில்லி பாபு (32) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. மகளுக்கு திருமணம் ஆனதில் இருந்து, ​​செல்வி சுப்ரமணியிடம் சரியாக பேசவில்லை.

ஆனால், சுப்ரமணி தன்னிடம் பேசுமாறு செல்வியிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் செல்வி, சுப்ரமணியிடம் இனிமேல் பேசுவதை நிறுத்திக் கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுப்ரமணி, மகள் நாகவள்ளியின் கணவரான மருமகனுடன் பேசுவதால், தன்னைக் கண்டுக் கொள்வதில்லை என தவறாக எண்ணியும், தன்னிடம் பேச மறுத்ததால், செல்வியைக் கொன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இந்நிலையில் நாகவள்ளி வீட்டிற்கு பெட்ரோல் வாங்கி கொண்டு சென்ற சுப்ரமணி, தன் மீதும் செல்வி மீதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

இருவரும் தீப்பிடித்து எரிவதை பார்த்த செல்வியின் மருமகன் டில்லி பாபு தீயை அணைக்க முயன்றார். பின்னர் தீ மளமளவென பரவியதால் அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்சில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


சுப்ரமணியும், டில்லி பாபுவும் 40 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், செல்வி 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார்.

பலத்த தீக்காயம் அடைந்த செல்வி செல்வி உயிர் பிழைப்பது கடினம் என்பதால், அவரிடம் நீதிபதி முன் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ஓட்டேரி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.