மறைந்த மனைவியின் மெழுகு சிலையுடன் 25 வது திருமண விழாவை கொண்டாடிய கணவர்!!

166

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகாவை சேர்ந்த தம்பதியினர் சந்திரசேகர் மற்றும் சுமா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில், கடந்த மாதம் சுமா உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அதனால், தனது 25 -வது திருமண விழாவை மனைவியின் மெழுகு சிலையுடன் கொண்டாட சந்திரசேகர் முடிவெடுத்தார். அதன்படி, இறந்த மனைவிக்கு மெழுகு சிலையை தயாரித்தார்.

பின்னர், 25 -வது திருமண விழாவை உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகாவில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் நடத்த முடிவு செய்தார். அதற்காக உறவினர்களையும் அழைத்தார். திருமண விழாவில் மனைவியின் மெழுகு சிலை வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த உறவினர்கள், சுமாவே நேரில் வந்திருப்பதாக கூறினர்.


மேலும் சந்திரசேகர் தனது மனைவியின் மெழுகு சிலை அருகே நின்றார். பின்னர், அவரின் 2 மகள்களுடன் மனைவியின் சிலை முன்பு போட்டோ எடுத்துக் கொண்டார். இச்சம்பவம், உறவினர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.