மலையுச்சியில் காதல் ஜோடிக்கு ஏற்பட்ட விபரீதம்!!

323

துருக்கியில்..

துருக்கியின் வடமேற்கே போலண்ட் கேப் பகுதியில் வசித்து வருபவர் நிஜாமதீன் குர்சு. இவருடைய காதலி எசிம் டெமிர் . தனது காதலியிடம் காதலை சொன்ன உடனே அடுத்து கோலாகலமாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

காதல் கைகூடியதை கொண்டாட முடிவு செய்தனர். இதனால் அவர்கள் இருவரும் மலைப் பகுதிக்கு காரில் சென்று மலை உச்சியில் ஏறினர். அங்கு அவர்கள் எடுத்து சென்ற உணவையும் , மதுவையும் சாப்பிட்டு கொண்டாடி குதூகலித்தனர்.

கீழே இறங்கி சுற்றுலா செல்லலாம் என முடிவு செய்து குர்சு தனது காருக்கு திரும்பினார். ஆனால் காதலி டெமிர் பின்னால் வருவார் என நினைத்து குர்சு நடக்கத் தொடங்கினார். காதலி அவருடன் வரவில்லை. அப்போது, திடீரென பலத்த சத்தம் கேட்டது.

இதனால், உடனடியாக அவர் மலை பகுதிக்கு ஓடிச்சென்று பார்த்தார். வருங்கால மனைவி மலையின் 100 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டார். இதனால் குர்சு அதிர்ச்சியில் கத்தி கூச்சலிட்டார். படுகாயங்களுடன் போராடி கொண்டிருந்த டெமிர் பின்னர் உயிரிழந்து விட்டார்.


இதுபற்றி குர்சு கூறும்பேது, காதல் செய்வதற்கான சிறந்த இடம் என தேர்வு செய்து மலை பகுதிக்கு சென்றோம். காதலை தெரிவித்த பின்பு, அது காலத்திற்கும் ஒரு நினைவாக இருக்க வேண்டும் என விரும்பி மலை உச்சிக்கு சென்று கொண்டாடினோம். திடீரென, காதலி சமநிலை தவறி விழுந்து விட்டார் என கதறிக் கொண்டே வாக்குமூலம் அளித்தார்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் அந்த பகுதியை தடை செய்து, மூடிவிட்டனர். சூரிய மறைவை காண்பதற்காக வழக்கமாக அனைவரும் வந்து, செல்ல கூடிய பகுதி தான் என்றாலும் சமீபகாலமாக சாலைகள் மிக மோசமடைந்து காணப்படுகின்றன. மலை உச்சியில் தடுப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை.

இந்த பகுதியில் வேலி அமைக்க வேண்டும் என டெமிரின் நண்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காதலை தெரிவித்த மகிழ்ச்சியில், அதனை கொண்டாடுவதற்காக மலை உச்சிக்கு சென்ற இளம்பெண்ணின் விபரீத முடிவு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.