மாநிலத்தில் 3வது இடம்… 497 மதிப்பெண்கள் எடுத்தும் விஜய் விழாவுக்கு அழைக்கப்படாத மாணவி கண்ணீர் மல்க புகார்!!

233

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 3 வது இடம் பிடித்த மாணவியை விஜய் கல்வி விருது விழாவுக்கு அழைக்கவில்லை என்று மாணவி கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 28ம் தேதி தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளைத் தொகுதி வாரியாக அழைத்து சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கி உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய்.

அந்த விழாவில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் வரையில் முகம் சுளிக்காமல் ஒவ்வொரு மாணவ, மாணவியரையும் அழைத்து பரிசும், சான்றிதழும் கொடுத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, மாநிலளவில் 3வது இடம் பெற்றும், அவருக்கு விஜய் பங்கேற்ற கல்வி விருது விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற குரல்கள் ஒலிக்க துவங்கியுள்ளது.

இது குறித்து பேசிய மாணவி, “கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்த நான் 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடமும், மாநில அளவில் 3வது இடம் பெற்றுள்ளேன்.

எனது தந்தையை போனில் அழைத்து, விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார்கள். இதனால் நாங்கள் மகிழ்ச்சியில் இருந்தோம்.


ஆனால், எங்களுக்கு 10 நாட்கள் ஆகியும் எந்த தகவலும் வரவில்லை. பின்னர், நாங்கள் போன் செய்து கேட்டதற்கு ரிஜெக்ட் ஆகிவிட்டீர்கள் என்றார்கள். எதனால் என்னை ரிஜெக்ட் செய்தார்கள் என தெரியவில்லை” என்று கண்ணீருடன் கூறியுள்ளார். விஜய் கவனிப்பாரா?