தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆரோக்கியநாதபுரத்தில் வசித்து வருபவர்கள் 55 வயது பாஸ்கர் . 53 வயது செல்வராணி தம்பதியர். இவர்களது மகள் 30 வயதில் ஜெனிபர்.
அதே தெருவில் வசித்து வருபவர் 36 வயது மரியகுமார். இவரை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மரிய குமாருக்கும் அவரது மனைவி ஜெனிபருக்கும் இருந்த குடும்பப்பிரச்னை காரணமாக இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் ஜெனிபர், கணவரிடம் இருந்து பிரிந்து பெற்றோர் வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சென்று விட்டதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி மரியகுமார், தனது மாமனார், மாமியாரிடம் கேட்டு வந்தார். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த மரியகுமார் மாமனார் பாஸ்கர் மற்றும் மாமியார் செல்வராணி ஆகிய இருவரும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அப்போது அவரை கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.