மாமியாரை பெட்ரோல் ஊற்றி நெருப்பையும் வைத்து கொளுத்திவிட்டார் மருமகள் பவித்ரா. என்ன காரணம்?
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ளது கரியபெருமாள் வலசை.. இங்கு வசித்து வருபவர் அலமேலு.. 48 வயதாகிறது.. இவர் அந்த பகுதியிலேயே கூலி வேலை செய்து வருகிறார். அலமேலுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.. மூத்த மகன் பெயர் சேட்டு, 2வது மகன் பெயர் ஏழுமலை.
இந்த ஏழுமலையின் மனைவி பெயர் பவித்ரா.. 21 வயதாகிறது.. ஆனால் திருப்பூரிலுள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் ஏழுமலை. இதனால் திருப்பூரிலேயே தங்கியிருக்க வேண்டியிருந்ததால், அலமேலுவும், பவித்ராவும் மட்டும் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள்.
காணவில்லை: இந்நிலையில், நேற்றுமுன்தினம் அலமேலுவின் மூத்த மகன் சேட்டு, அம்மாவை பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார் அப்போது வீட்டில் பவித்ரா மட்டும் இருந்திருக்கிறார். அம்மா எங்கே என்று சேட்டு கேட்டதற்கு, வெளியில் சென்றவர் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று பவித்ரா சொல்லி உள்ளார்.
இதனால், அம்மாவை தேடிச்சென்றார் சேட்டு. எங்கெங்கோ தேடிப்பார்த்தும் அலமேலு கிடைக்கவில்லை. அப்போதுதான், அங்குள்ள தனியார் நிலத்தில் அலமேலுவின் சடலம் இருப்பதை பார்த்து கதறியிருக்கிறார். அலமேலுவை யாரோ கொன்று, உடம்பை எரித்திருக்கிறார்கள்.. பாதி உடல் எரிந்த நிலையில் கிடந்திருக்கிறார் அலமேலு.
விசாரணை: இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சிங்காரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையையும் மேற்கொண்டனர். அப்போதுதான் சம்பவத்தன்று காலையில், அலமேலுவுக்கும், பவித்ராவுக்கும் தகராறு நடந்தது, அக்கம்பக்கத்தினர் மூலம் போலீசுக்கு தெரியவந்தது.
இதையடுத்து விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார் பவித்ரா. அப்போது போலீசாரிடம், தன்னுடைய கள்ளக்காதலன் மணிகண்டனுடன் சேர்ந்து மாமியாரை கொன்றதை கூறினார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் பிடித்து விசாரிக்கையில், மொத்த உண்மையையும் போலீசில் வாக்குமூலமாக மணிகண்டன் சொன்னார்.
பக்கத்து வீடு: அதாவது, பவித்ராவின் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார் மணிகண்டன். பி.காம் 2ம் ஆண்டு படித்து வரும் மணிகண்டனுக்கு 19 வயதாகிறது.. பக்கத்து வீடு என்பதால், அடிக்கடி இவர்கள் சந்தித்து பேசி, நாளடைவில் அது தகாத உறவாக மாறியுள்ளது… இதற்கு பிறகு பவித்ராவும், மணிகண்டனும் அடிக்கடி உல்லாசமாகவும் இருந்திருக்கிறார்கள்.
இந்த விஷயம் மாமியார் அலுமேலுவுக்கு தெரியவந்துள்ளது. இதனால், தகாத உறவை கைவிடும்படி மருமகளை கண்டித்துள்ளார். ஆனாலும் பவித்ரா அவர் பேச்சை கேட்கவில்லை. சம்பவத்தன்றும், இது சம்பந்தமாகவே மாமியாருக்கும் மருமகளுக்கும் தகராறு வந்துள்ளது.
மருமகள்: இதற்கு பிறகு, மாலை 4.30 மணிக்கு ஆடு மேய்க்க சென்றுவிட்டார் பவித்ரா ஆனால், நீண்ட நேரமாகியும் பவித்ரா வீடு திரும்பாததால், பதற்றமடைந்த அலமேலு, மருமகளை தேடி சென்றிருக்கிறார்.
அப்போது, அங்கிருந்த தனியார் நிலம் ஒன்றில் பவித்ராவும், மணிகண்டனும் நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் அலமேலு. இதனால் மறுபடியும் மருமகளை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், அலுமேலுவின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.
இதைப்பார்த்து பயந்து போன பவித்ரா, அங்கிருந்து தன்னுடைய வீட்டுக்கு ஓடிவந்துவிட்டாராம். கல்லூரி மாணவன்: ஆனால், அப்போதும் ஆத்திரம் தீராத மணிகண்டன், தன்னுடை பைக்கிலிருந்து பெட்ரோலை ஒரு கேனில் பிடித்து வந்து, அலமேலுவின் உடல் மீது ஊற்றி, நெருப்பை வைத்து எரித்துவிட்டாராம்.
இவ்வளவும் போலீசில் மணிகண்டன் தெரிவித்ததையடுத்து, கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். கல்லூரி மாணவர் செய்த இந்த கொலை கிருஷ்ணகிரி பகுதியில் மிகுந்த பரபரப்பை தந்து வருகிறது.